Udhayanidhi Stalin About Budget : இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - 25ஐ வெளியிட்டார். அது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 25ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தார். இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி அவர்களை புகழ்ந்து பல தகவல்களை வெளியிட்டார். அதே நேரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பட்ஜெட் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்".
"இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்". "ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை".
"இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி", என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதே போல தமிழாகி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பதிவில் "கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை".
"வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை". "இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால பட்ஜெட் உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 12ல் ஆரம்பம்; 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு