தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னையில் அனிமேஷன், விசுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC-XR) ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு தயார் செய்வதற்கான கருத்தரங்கை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு எல்காட் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருந்தரங்கில், எல்காட் நிறுவனத்தின் செயலாளர் குமரகுருபரன், எல்காட் நிர்வாக இயக்குனர் அனிஷ் சேகர் மற்றும் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அனிமேஷன், கேமிங் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள், நிபுணர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.
சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு
இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், அனிமேஷன் துறையை தற்போது கையில் எடுத்துள்ளோம். உலகளாவிய சந்தையில் இத்துறைகளின் தேவை அதிகரித்துள்ளது" என்று கூறினார். மேலும், இத்துறைகளில் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ப்பது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "இன்னும் 2 மாதங்களில் தமிழ்நாட்டில் ஐ.டி. துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்றார். மேலும், "தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால் ஐடி பார்க் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்" எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மணிப்பூரில் 143 நாட்களுக்குப் பின் மீண்டும் மொபைல் இன்டர்நெட் சேவை தொடக்கம்