விவசாயிகளின் அபய குரலுக்கு ஸ்டாலின் தீர்வு காண்பாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Sep 24, 2023, 11:11 AM IST

விவசாயிகளின் அபய குரலுக்கு ஸ்டாலின் தீர்வு காண்பாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்


இந்தியா குரல் என 2ஆவது ஆடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர்  காவேரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளின் அபய குரலுக்கு தீர்வு காண முன் வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா குரல் என்ற போட்காஸ்ட் பக்கத்தை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்து அதில் பேசி வருகிறார். முதல் ஆடியோ வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த நிலையில், “இந்தியாவின் குரல் என்று  2ஆவது ஆடியோவை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் காவிரி பிரச்சனைக்காக, தமிழ்நாட்டு விவசாயிக்காக அக்கறையாக அவர் கோரிக்கை வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் அதில் பிறரை குறை சொல்கிறாரே தவிர, தன்னுடைய குறைகளை நிவர்த்தி  செய்வதற்காக எந்த விதமான நடவடிக்கையும் அவர் எடுப்பதற்கு முன்வரவில்லை.” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து அவர் பேசியதாவது: “இன்றைக்கு செயல்படாத முதலமைச்சரால், வேதனையின் உச்சத்தில் இந்த தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே இன்றைக்கு ஒரு நாடகமாக இருக்கிறது.  இவ்வளவு நடந்ததற்கு பிறகும் வெள்ளிக்கிழமை அன்று  கர்நாடகா  துணை முதலமைச்சர் சிவக்குமார்  காவிரிக்கு நிரந்தர தீர்வு  மேதாது அணை கட்டுவது என்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதை கண்டித்து இதுவரை ஒரு கண்டன குரல் எழுப்பவில்லை. ஆனால் இந்தியாவின் குரல் என்று தமிழகத்தினுடைய குரலை நீங்கள் தோல்வியடைந்து இருக்கிறீர்களே? தமிழகத்தின் உரிமைக்காக நீங்கள் தோல்வி அடைந்ததை ஒப்புக் கொள்ளாமல், அதை மறைப்பதற்காக இந்தியாவின் குரல் என்று நீங்கள் பேசுவது நியாயம் தானா என்று விவசாயி கேட்கிறார்கள்.

உச்ச நீதிமன்றமோ காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி நீர் ஆணையம் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும் கூறிய பிறகும்  கர்நாடாக துணை முதலமைச்சர் சிவகுமார் மேகதாது அணை கட்டுவது தான் தீர்வு என்று சொல்கிறார்.நாம் தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமையை  தான் கேட்கிறோம் பிச்சை கேட்கவில்லை இதற்காக எடப்பாடியார் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பயிர் காப்பீடு ரத்து செய்யப்பட்டது மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வர் சொல்லுகிறார். ஆனால்  மத்திய அரசோ நீதிமன்றத்திலே  மாநில அரசு தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

இந்தியா கூட்டணிக்காக இந்தியாவின் குரல் என்று ஆடியோ கொடுத்தவர் தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தருவது திராணி இருக்கிறதா, தகுதி இருக்கிறதா? உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அக்கறை இருக்கிறதா? என்று விவசாயிகள் கேட்கிறார்கள்

தமிழ்நாட்டின் குரலாக, இந்தியாவின் குரலாக வெளியிட்டு இருக்கிற மு.க .ஸ்டாலின்  அவர்களே, உங்களுக்கு தமிழ்நாட்டில் இந்த கேள்வியை விவசாயிகள் கேட்பது உங்கள் காதுகளில் விழுகிறதா? 

டெல்டாகாரன் என்று நீங்கள் வாயிலேயே பேசுகிறீர்களே, அந்த டெல்டா விவசாயிகள் கண்ணீரும், கம்பலமாக, கவலையோடு இருக்கிறார்களே, அவர்களை கண்ணீரை துடைக்க  காவிரியை உரிமையை நீரை பெற்று  தந்து துடைக்க வேண்டாமா?

காவேரிக்காக புரட்சித்தலைவி அம்மா தன் உயிரை பணையம் வைத்து, 72 மணிநேரம் தொடர்  உண்ணாவிர போராட்டம் நடத்தினார்கள். அதேபோல் எடப்பாடியார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி உரிமை பெற்று தந்தார். அண்டை மாநிலத்திலும் நல்லுறவு வைத்துள்ள முதலமைச்சர் ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற்று தரவில்லை.

மின்கட்டணம் குறைக்கப்படாவிட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும்... வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும்! - அன்புமணி

தமிழகத்தின் ஜீவாதார உரிமையை பறிக்க கர்நாடகத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது. காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடகா அணையின் நீர் நிலை இருப்பு, மற்றும் மழைநீரைஆகியவற்றை அலசி ஆராய்ந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் மேகதாது அணை கட்டுவோம் என துணை முதலமைச்சர் கூறுகிறார் இதுவரை அறிக்கை கூட வெளியிடவில்லை.

 இந்தியாவின் குரலுக்காக வாய் திறக்கும் முதலமைச்சர் தமிழகத்தில் ஜீவராதார உரிமைக்காக அக்கறை காட்டாத ஏன்? எடப்பாடியார் விவசாயிக்காக குரல் கொடுத்து வருகிறார்.  ஆனால் வேதனையின் உச்சத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை பொம்மை முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. எழுதிக் கொடுத்ததை பேசுவாக கடமையாகக் கொண்டு வாய் சொல்வீராக இருக்கும் முதலமைச்சர்,  காவேரி பிரச்சனையில் செயல்வீரராக மாறுவாரா?.” என கேள்வி எழுப்பி உள்ளார்.

click me!