மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக குறை கூறுவதா? தமிழிசை காட்டம்!

By Manikanda Prabu  |  First Published Sep 24, 2023, 11:32 AM IST

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுகவினர் குறை கூறுவதை ஏற்க முடியாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் இன்று நடைபெற உள்ள வந்தே பாரத் புதிய ரயில் பயணத் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் தமிழகத்தின் மக்களில் ஒருவர் என்ற முறையில்  வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.  நாடு பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது ஆனால் தவறுகளை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.” என்றார்.

Tap to resize

Latest Videos

விவசாயிகளின் அபய குரலுக்கு ஸ்டாலின் தீர்வு காண்பாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

பெண்களுக்கு சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது ஒரு சமுதாய புரட்சி என தெரிவித்த தமிழிசை, இதன் மூலமாக தமிழகத்தில் 13 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 77 பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் வர முடியும். இதற்கு முன்னர் மத்திய அரசில் பெரும்பான்மையாக அங்கம் வகித்தபோது மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வரமுடியாத திமுகவினர் இந்த மசோதாவை குறை கூறுவதை ஏற்க முடியாது. இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்திய பிரதமரை விமர்சிப்பதை விட்டுவிடவேண்டும்.   இந்த திட்டத்தை  விமர்சிப்பவர்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் என்ப குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்திற்கு தேவையான காவிரி தண்ணீரை கூட்டணியில் இருந்து கொண்டு பேசி தீர்க்க முடியாத அரசு தான் செயல்படுகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களில் ஒன்றான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக குடிநீர் கிடைத்திருக்கும் என்றார். பாரத பிரதமர் நரேந்திர மோடி  ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும் என்றும் தமிழிசை கூறினார்.

click me!