மாஸ் காட்டும் அமைச்சர் செங்கோட்டையன்..! இனி கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சீட் கிடைக்க க்யூல தான் நிற்கணும்.!

By thenmozhi gFirst Published Nov 1, 2018, 1:44 PM IST
Highlights

பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பெற்ற பிறகு தமிழக அரசு பள்ளிகளில்  தொடர்ந்து பல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
 

பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பெற்ற பிறகு தமிழக அரசு பள்ளிகளில் தொடர்ந்து பல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகள் என்றாலே தமிழ் மீடியம் மட்டும் தான்...தமிழில் மட்டும் படித்து என்ன செய்வது...நாம கஞ்சி கூல் குடித்தாவது, நம்ம பசங்களை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர்கள் பேசும் வார்த்தையை கேட்டு இருப்போம் அல்லவா...

ஆனால் இனி அதற்கான வாய்ப்பே கிடையாது..தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்தார் செங்கோட்டையன்...அது மட்டுமா, நூறு ஆங்கில ஆசிரியர்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து சிறப்பு ஆங்கில வகுப்பை எடுக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்...

மருத்துவ படிப்பு சேர்வதற்காக, எழுதவேண்டிய நீட் தேர்வை எதிர்க்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த 422 மையங்கள் அமைத்து கொடுத்தார்..பாட திட்டத்தில், பல மாற்றங்களை கொண்டு வந்தார்..தற்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி என மழலையர் பள்ளிகள் உருவாக்க அடிக்கல்நாட்டி உள்ளார்  அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழக அரசியலில் எப்போதும் ஒரு விதமான பரபரப்பு  காணப்பட்டாலும், பல அமைச்சர்கள் பற்றி பல புகார்கள் வந்தாலும் அமைச்சர் செங்கோட்டையன் மட்டும்  தனியாக தெரிகிறார்...அவரின் செயல்பாடுகளும் மிக சிறப்பாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

 

click me!