ஆசிரியர்களுக்கும் வைத்தார் பாரு ஆப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் தாறுமாறு..!

By thenmozhi gFirst Published Nov 7, 2018, 12:35 PM IST
Highlights

தமிழக அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் முதல் எதிர்கட்சிகள் வரை சில விமர்சனங்கள் முன்வைத்தாலும் அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் தனி கவனம் செலுத்துகின்றனர் மக்கள்.

தமிழக அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் முதல் எதிர்கட்சிகள் வரை சில விமர்சனங்கள் முன்வைத்தாலும் அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் தனி கவனம் செலுத்துகின்றனர் மக்கள்.காரணம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்றது முதல் வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக களத்தில் கில்லி விளையாடுகிறார் அமைச்சர்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி, 3,688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளது. 

புதிய திட்டம்

இந்த திட்டத்திற்காக,15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை, முதற்கட்டமாக, பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு, பள்ளிக்கு வருகை தருவார்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

click me!