அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி...! ஜனவரி 1 முதல்....! பெற்றோர்கள் குஷியோ குஷி....!

By thenmozhi gFirst Published Dec 4, 2018, 7:01 PM IST
Highlights

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் நடைப்பெற்ற வைர விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் நடைப்பெற்ற வைர விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக்கொண்டார்.அப்போது பேசிய, அமைச்சர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டதில் உள்ள பள்ளிகளில் அரை ஆண்டு தேர்விற்கான பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது.

எனவே, அரையாண்டு தேர்வு தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், இந்த நான்கு மாவட்டத்தில் மட்டும் அரை ஆண்டு தேர்வை தள்ளி வைப்பதில், சிரமமாக இருப்பதால் இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என தெரிவித்து உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதினால் பயப்பட தேவை  இல்லை... மதிப்பெண் வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்தார். 

ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தி  வருகிறார் செங்கோட்டையன்.... அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கல்வி முறையில் நல்ல மாற்றத்தை  கொண்டு வரும் புலியாக செயல்பட்டு வருகிறார் செங்கோட்டையன்.

click me!