சிறந்த குறும்படங்களுக்கும் அரசு விருது.! சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் உறுதி

By Ajmal Khan  |  First Published Apr 17, 2023, 12:13 PM IST

திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்படுவதை போல குறும்படங்களுக்கும் விருது வழங்க பரிசீலிக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


விரைவில் விருது

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில்  பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திரைப்படக் கவிஞர்கள் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தகவல் தெரிவிக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் 2009 முதல் 2014 வரை வழங்கப்படாமல் இருந்த விருதுகள்,  கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 314 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதாகவும்,  2015 ஆம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  2016 முதல் 2022 ஆண்டு வரையிலான விருத்தாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

ஷாக்கிங் நியூஸ்.. கபடி விளையாடிய சிறுவன்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. இதுதான் காரணமா?


 
குறும்படங்களுக்கும் விருது

தொடர்ந்து பேசிய எழிலரசன் திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது போல பல்வேறு சமூக சிந்தனைகளை விதைத்து வரும் குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், எழிலரசன் வழங்கிய ஆலோசனைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று குறும்படங்களுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

துபாய் தீ விபத்தில் தமிழர்கள் பலி.! உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை- 10 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்

click me!