மருத்துவமனையில் நல்லகண்ணு; நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published : Jan 28, 2023, 04:22 PM IST
மருத்துவமனையில் நல்லகண்ணு; நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுருக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான நல்லகண்ணு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 24ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர்கள் பணம் கேட்டால் கொடுங்கள்; மேடையிலேயே கமிசன் குறித்து பேசிய டி.ஆர்.பாலு

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் அமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டார்.

150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்லகண்ணு ஐயாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவர் என்றும் தெரிவித்துள்ளர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?