திருச்சியில் ரூ.8.05 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்; அதிகாரிகள் விசாரணை

By Velmurugan s  |  First Published Jan 28, 2023, 1:53 PM IST

திருச்சி விமான நிலையத்தில் அட்டை பெட்டியில்  மறைத்து கடத்தி வந்த ரூ.8,05,500 மதிப்புள்ள 10,000 அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்  இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் செய்தனர்.  

150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

Tap to resize

Latest Videos

undefined

சோதனையின் போது ஒரு பயணி அட்டை பெட்டியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சத்து 5 ஆயிரத்து 500 என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

click me!