திருச்சி நிலத்தரகர் கடத்தல்; சினிமா பாணியில் மீட்ட காவல் துறை

By Velmurugan sFirst Published Jan 24, 2023, 6:33 PM IST
Highlights

திருச்சியைச் சேர்ந்த நிலத்தரகர் மற்றும் மனைவி கடத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிலத்தரகர் பழனியப்பன். இவர் தனது மனைவி சந்திராவுடன் சென்னைக்கு காரில் சென்று நிலம் வாங்கி விட்டு மீண்டும் மணப்பாறை திரும்பியுள்ளார். அப்போது திருச்சி அருகே உள்ள சமயபுரம் பகுதியில்  டீக்கடையில் காரை நிறுத்தி இருந்த பொழுது திடீரென காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் அவர்களை காருடன்  கடத்திச் சென்றனர். 

சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் உத்தரவு

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடத்திச் செல்லப்பட்ட காரை துரத்திச் சென்றனர். ஆனால் கடத்தல் காரர்கள்  தப்பி சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர் திருச்சி மற்றும் திண்டுக்கல் பகுதியில் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பழனியப்பனின் கார் நேற்று மாலை திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டி அருகே நின்றுகொண்டிருந்தது. அந்த காரை அடையாளம் கண்ட காவல் துறையினர், அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

எய்ம்ஸ் எங்கே? செங்கல்லுடன் போராட்டத்தில் குதித்த திமுக கூட்டணி கட்சிகள்

ஆனால் பழனியப்பனியும், மனைவி சந்திராவையும் அவர்கள் கடத்திச் சென்று திண்டுக்கல் பகுதியில் விட்டு விட்டு அவர்களிடம் இருந்த 10 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர். அங்கிருந்து தப்பி வந்த பழனியப்பன், சந்திரா தம்பதியினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடத்திலில் ஈடுபட்ட காளிமுத்து என்ற நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கடத்தல் காரணம் குறித்தும் தப்பி ஓடியவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!