திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த துலையாநத்தம் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவரது மனைவி கோமதி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து கோவை பெண் சாதனை
undefined
இந்த கொலை சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக மொத்தமாக 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் மகள் காதல் திருமணம்; பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் சோகம்
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீ வர்சன், ரமேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டாது. அபராதத் தொகை ரூ.2 ஆயிரத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து 136 நாட்களுக்குள் முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.