சென்னையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

By Velmurugan sFirst Published Jan 28, 2023, 1:31 PM IST
Highlights

சென்னை திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரின் மூலமாகவும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மூலமாகவும் நாளுக்கு நாள் கொசுக்களின் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலமாக கொசு ஒழிப்பு மருந்து புகை வடிவில் தெளிக்கப்பட்டு வருகிறது.

150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

மேலும் மழை காலத்தின் போது கொசுக்களிடம் இருந்து மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாத வகையில், பொது மக்களுக்கு கொசு வலை விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள், கழிவு நீர் ஓடைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்துவது சிரமமாகவே உள்ளது. இந்நிலையில், நவீன முறையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில், ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.

Video: பழனி; குடமுழுக்கை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், ஓட்டேரி நல்லா கால்வாயில் இன்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார்.

click me!