
மா.சுப்பிரமணியனுக்கு உடல் நிலை பாதிப்பு
தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் மா.சுப்பிரமணியன், இவன் திமுக தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை உடனடியாக நிறைவேற்றுவார். அந்த அளவிற்கு சுறு சுறுப்பு கொண்ட அமைச்சராக மா.சுப்பிரமணியன் திகழ்கிறார். மேலும் தனது 64 வது வயதிலும் மாரத்தான் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.
மருத்துவனையில் சிகிச்சை
இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென சக்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்தில் உடல் நிலை சீரானதை தொடர்ந்து வீடு திரும்பினார். ரத்தப் பரிசோதனையின் அறிக்கை இன்று மதியம் வெளிவரும் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்