தஞ்சை தனியார் மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்; உறவினர்கள் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 10:12 AM IST

கும்பகோணம் காமராஜ் சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமாந்துரையைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 22). இவர் காமராஜ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையின் மேல் தளத்தில் செவிலியர்களுக்கான ஓய்வு அறை உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு மருத்துவமனை மேல் தளத்தில் உள்ள செவிலியர்கள் தங்கும் பகுதிக்கு சென்ற வைஷ்ணவி காலை நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. மேலம் சக செவிலியர்கள் தற்செயலாக ஓய்வு அறைக்கு சென்றுள்ளனர். அங்கு வைஷ்ணவி தனது துப்பட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் செவிலியரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!