மகா மகா குளம் அருகே ஒட்டப்பட்டிருந்த அதிமுக போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் ஆகிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போஸ்டரை பார்த்து மூதாட்டி ஒருவர் மனதார தொட்டு கும்பிட்டு வணங்கி கண்ணீர் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிடைமருதூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான. AVK.அசோக் குமார் கும்பகோணம் அதிமுக வழக்கறிஞர் R. கர்ணன் ஆகியோர் கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் உட்பட தஞ்சை மாவட்டம் பகுதிகள் அனைத்திலும் மாநாடு வரவேற்பு போஸ்டரை ஒட்டி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மகா மகா குளம் அருகே ஒட்டப்பட்டிருந்த அதிமுக போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் ஆகிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த புகைப்படத்தை பார்த்து வயதான மூதாட்டி ஒருவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை அய்யாவையும் மனதார தொட்டு கும்பிட்டு வணங்கி தங்களுடைய உள்ள குமுறலை அவர்களிடம் தெரிவித்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.