சந்திரயான் 3 விண்கலம் வெற்றிபெற வேண்டி திங்களூர் கோவிலில் சிறப்பு வழிபாடு

By Velmurugan sFirst Published Jul 14, 2023, 7:16 PM IST
Highlights

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் நிலை பெற வேண்டி. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான சந்திரன் பரிகார ஸ்தலமான திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் சந்திர பிரிதி ஹோமம் நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார். சந்திரன் பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தோஷ நிவர்த்திக்காக கைலாசநாதர் இங்கு வந்து சந்திரனை வழிப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் சந்திர பிரிதி ஹோமம் நடந்தது. இன்று சந்திராயன் 3 விண்கலம் வின்னில் ஏவப்படுவதை ஒட்டி, வெற்றிக்கரமாக விண்கலம் நிலை பெற வேண்டி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திர பிரதி ஹோமம் நடத்தப்பட்டது. கைலாசநாதர் மூலவர் சன்னதி முன்பு சிவாச்சாரியார்கள் பல்வேறு  வகையான யாகப் பொருட்களை கொண்டு சந்திர பிரிதி ஹோமம் நடத்தினர். 

தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி 

பூரணா ஹதியுடன் யாகம் நிறைவுப் பெற்ற உடன், சந்திரனுக்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்கலம் வெற்றிக்கரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

திடீரென சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை; குழந்தையை காப்பாற்ற வீட்டுக்குள் பேருந்தை செலுத்திய ஓட்டுநர்

click me!