உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவில்? - அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்!

By Dinesh TG  |  First Published Jun 20, 2023, 8:13 AM IST

தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 


தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் அமைச்சர்.ராமச்சந்திரன்ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் தங்குமிடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்கு சுற்றுலாத் துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.



தஞ்சாவூருக்குதான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வந்தனர். இதே அளவில் 2019 ஆம் ஆண்டிலும் வருகை தந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர். நிடப்பாண்டில், கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது.

Tap to resize

Latest Videos

உதயநிதியின் பொய்யை கேட்கமுடியாமல் திமுக கூட்டத்தில் மின்விசிறி கீழே விழுந்து விட்டது!இறங்கி அடிக்கும் அண்ணாமலை

ரூ.216 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

பூம்புகாரில் ரூ. 203 கோடியிலும், பிச்சாவரத்தில் ரூ. 13 கோடியிலும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அனைத்து கோயில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது.

மருத்துவச் சுற்றுலா

மருத்துவச் சுற்றுலா தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்கிறது. அடுத்த முறை இன்னும் அதிகமான நாடுகளில் இருந்து வருவர் என எதிர்பார்க்கிறோம்.

தஞ்சையில் தீம் பார்க்

தஞ்சாவூரில் தீம் பார்க் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

click me!