ரகசிய ஆடியோவை அம்பலப்படுத்திய காவல்துறைக்கு எதிராக திமுக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 17, 2023, 8:12 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ.வின் மிரட்டல் ஆடியோவை அம்பலப்படுத்தியதாகக் கோரி காவல் துறையினருக்கு எதிராக திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்நிலை பகுதியில் சட்ட விதிகளை மீறி மணல் எடுத்ததாக கூறி  மணல் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றை பட்டுக்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில் இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏ வுமான அண்ணாதுரை, டிஎஸ்பி பாலாஜியிடம் போனில் தொடர்பு கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் உள்ளிட்டவற்றை மீண்டும் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கக்கோரி கேட்ட மிரட்டல் ஆடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

Tap to resize

Latest Videos

undefined

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இதனை அடுத்து காவல்துறையின் மூலம் இந்த ஆடியோ  வெளியிடப்பட்டதாக கூறி இதனை கண்டிக்கும் விதமாக பட்டுக்கோட்டை பகுதி திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் இன்று  பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜி மற்றும் எஸ் ஐ புகழேந்தி ஆகியோரை கண்டித்து  நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆளும் கட்சியான திமுகவினரே காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிகழ்வு இப்பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறி வருகிறது.

“ செந்தில் பாலாஜியை கைது செய்ய இதுதான் காரணம்.. ஆனா பாஜக நினைப்பது நடக்காது” டி.ஆர். பாலு பேச்சு

click me!