VIDEO | காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி! - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

By Dinesh TG  |  First Published Jun 9, 2023, 3:00 PM IST

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி முதலை முத்துவாரி மற்றும் வின்னமங்களம் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றில் நடந்து முடிந்த தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
 


தஞ்சை மாவட்டம் ஆலக்குடி முதலை முத்துவாரி மற்றும் வின்னமங்களம் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றில் நடந்து முடிந்த தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நீர் வளத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர் வளத்துறை சார்பில் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில். சுமார் 1068 கி.மீ நீளத்திற்கு 189 பாசன வாய்க்கால்கள் மற்று பாசன வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.



அதேபோல் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 116 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 218 கிமீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை 16ம் தேதி வந்தடைகிறது. அன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்கு கல்லணை திறக்கப்படுகிறது. இதனையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த தூர்வாரும் பணியினை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலக்குடி முதலை முத்துவாரி வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை ஆய்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

குறுவை நெல் சாகுபடிக்கு 7182 மெட்ரிக் டன் விதை நெல் கையிருப்பு! - அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்!

சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 கிமீ தூரத்திற்கு இப்பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வாய்க்கால் மூலம் சுமார்2047 ஏக்கர் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தஞ்சை மாவட்டம் விண்ணமங்களம் பிள்ளை வாய்க்கால் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12கிமீ தூரத்திற்கு சி மற்றும் டி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.

இந்த இரண்டு பணிகளையும் முதல்வர் அமைச்சர்கள் துரை.முருகன். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். கே.என்.நேரு, அன்பில்.மகேஷ். மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

click me!