குறுவை நெல் சாகுபடிக்கு 7182 மெட்ரிக் டன் விதை நெல் கையிருப்பு! - அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்!

By Dinesh TG  |  First Published Jun 9, 2023, 1:25 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
 


காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.


காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து 7 மாவட்ட அதிகாரிகள், விவசாயிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நான்கு அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடத்தினர்.



தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெரியக் கருப்பன் ஆகியோர் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர்.பன்னீர் செல்வம் கூட்டத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறினார்.

குறுவை நெல் சாகுபடிக்கு 7182 மெட்ரிக் டன் விதை நெல் தேவைபடுவதால், போதிய அளவு கையிருப்பு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ரசாயன உரங்கள் உட்பட அனைத்தும் தேவையான அளவு இருப்பதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 

Tap to resize

Latest Videos

click me!