“எப்புட்றா.. ஹே ஒன்னத்தான்... ஒன்னத்தான்.!" மீம்ஸ் மூலம் விழிப்புணர்வை உண்டாக்கும் தஞ்சாவூர் காவல்துறை

By Raghupati R  |  First Published May 31, 2023, 1:02 PM IST

"ஹே ஒன்னத்தான்... ஒன்னத்தான்..." என இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


தற்போது கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்தான் இப்படியான மீம்ஸ்களை அதிகளவில் உருவாக்கி வருகின்றனர். இத்தகைய மீம்ஸ்கள் பெரும்பாலும் தனி ஒரு நபரை விமர்சிக்கும் வகையிலோ, கலாய்க்கும் வகையில் காமெடியாகவோ தான் இருக்கும். ஆனால், இப்படியான மீம்ஸ்களை வைத்து சமூக விழிப்புணர்வையும் உண்டாக்க முடியும் என நிரூபித்து அசத்தி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர்.

லவ் டுடே படத்தின் ஒரு காட்சியில் நாயகன் பிரதீப்பிடம் அவரது காதலியாக நடித்துள்ள இவானா, தனக்கு ஆன்லைனின் நிறைய ஆபாச மெசேஜ் வருவதாக கூறுவார். இதற்கு பிரதீப், பிளாக் பண்ணிடு, நமக்கெல்லாம் சைபர் புகார் எப்படி கொடுக்கணும்னு கூட தெரியாது என கூறி இருப்பார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்த காட்சியை அப்படியே பயன்படுத்தி, அதான் 1930 என்கிற எண்ணிற்கு கால் பண்ணினால் உடனே சைபர் போலீஸில் புகார் கொடுக்கலாமே என மீம் ஒன்றை உருவாக்கி அதனை தஞ்சாவூர் போலீஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஹே எப்புட்றா என்ற வார்த்தையையும், இதை சொன்ன சிறுவனையும் மறக்க முடியாது. இதை வைத்து விழிப்புணர்வு மீமை உருவாக்கினார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் காவல்துறை வெளியிட்ட மற்றொரு  மீம்ஸ் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. "ஹே ஒன்னத்தான்.. ஒன்னைத்தான்" என தொடங்கும் வசனத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் பேசும் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகியது.

காவல் உதவி செயலி மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை ட்விட்டரில் 2 போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. "ஹே ஒன்னத்தான்.. ஒன்னத்தான்.." எவ்ளோ ஆப்ஸ் போன்ல் இன்ஸ்டால் பண்ணியிருக்க.. காவல் உதவி ஆப் இன்ஸ்டால் பண்ணி வச்சிக்கோ.. கண்டிப்பா யூஸ் ஆகும்.." என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் மற்றொரு போஸ்டில், "ஹே ஒன்னத்தான்.. ஒன்னத்தான்.." சைபர் ஸ்டாக்கிங் பிரச்சினைகளை ஃபேஸ் பண்றியா.. 1930க்கு கால் பண்ணி ரிப்போர்ட் பண்ணு.." என்று இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பலரும் தஞ்சாவூர் காவல்துறையை பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

click me!