தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருசக்கர வாகனமும், மணல் ராரியும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு பந்தார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஓட்டுநராக வேலை பார்த்துவந்தார். அர்ஜுனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பி இருசக்கர வாகனத்தில் திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
undefined
திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி மணல் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. கண்டியூர் அடுத்த அரசூர் பிரதான சாலை அருகே வரும்போது தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி வந்த இருசக்கர வாகனமும், மணல் லாரியும் எதிர்பாரதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அர்ஜுனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பழனி கோவிலில் தங்க சங்கிலியை உண்டியலில் போட்ட பக்தை; கோவில் நிர்வாகத்தின் செயலால் நெகிழ்ச்சி
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு காவல் டிஎஸ்பி ராஜ்மோகன், நடுக்காவேரி உதவி ஆய்வாளர் சார்லிமேன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அர்ஜுனன், பாலசுப்பிரமணியனின் உடல்களைக் கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இது குறித்து நடுக்காவேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வீதியில் பிறந்த நாள் கொண்டாட்டம்; மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அத்துமீறல் - 4 பேர் கைது