தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரம்... பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்!!

By Narendran S  |  First Published May 21, 2023, 11:17 PM IST

தஞ்சையில் மது அருந்தி உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 


தஞ்சையில் மது அருந்தி உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏற்கனவே விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் தஞ்சையில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தொலைத்துக் கட்டிவிடுவேன்! குமரி சோதனைச் சாவடியில் காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர்!

Tap to resize

Latest Videos

undefined

இதை அடுத்து  பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடயே உயிரிழந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கலெக்சன் கல்லா கட்டும் அக்கா... அக்கா... புதுவை முழுவதும் தமிழிசையை விமர்சிக்கும் போஸ்டர்கள்

அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மதுவில் சயனைடு கலந்திருந்ததால் தான் இருவரும் உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!