தஞ்சை மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை அதிகாரிகளின் உத்தரவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எம்.ஜி.எம். சாலை என்று அழைக்கப்படும் புதிய பேருந்து நிலையம் சாலையில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
undefined
அந்த வகையில் சாலையோரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நீண்டு வளர்ந்து இருந்தது. சாலை விரிவாக்கம் பணிக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தியதை விட மரத்தின் மேல் பகுதி மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அடியிலிருந்து சுமார் 7 அடி உயரம் வரை உள்ள மரத்தின் பகுதியை மட்டும் பெயர்த்து எடுத்து அதனை வேறொரு பகுதியில் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
“ஓரமா போங்க” ஹாரன் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் மூக்கை உடைத்த போதை ஆசாமிகள்
இதற்காக கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன. இன்று வளாகத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தேவையான உரங்கள் இட்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு போட்டியால் சாதிய மோதல்களுக்கான ஆபத்து.. எச்சரிக்கும் திருமாவளவன்.!