முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் - முதல்வர் அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jun 10, 2023, 11:35 AM IST

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் அல்லது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கம் போல் இந்த ஆண்டும் வருகின்ற 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

90 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரப்படும் பணிகளை முதல்வருடன் சேர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், துரைமுருகன் உள்ளிட்டோரும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் செல்பட்டுவரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். அல்லது புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.

Latest Videos

திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 500 மதுக்கடைகளை மூடுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும். 

கொலை குற்றவாளியை சயின்டிஸ்டாக மாற்றிய கோவை மத்திய சிறை; சிறையில் உருவான இ சைக்கிள்

கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும் மேகதாது பகுதியில் அணை கட்டுவோம் என்று தெரிவித்திருந்தனர். அப்போதே நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போதும் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!