ரமலான் பண்டிகை; பள்ளிவாசலுக்கு வந்த இஸ்லாமியர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு

By Velmurugan sFirst Published Apr 11, 2024, 6:11 PM IST
Highlights

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள் உலமாக்கள் சபை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு திரட்டினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக துணை பொதுச் செயலாளரும், தற்போதைய உறுப்பினருமான கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கனிமொழிக்கு அப்பகுதி மக்கள் அமோக வரவேற்பும் அளித்து வருகின்றனர்.

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த இளைஞர்கள்; கைகொடுத்து ஊக்கப்படுத்திய ஆ.ராசா

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அமைந்துள்ள அரபிக் கல்லூரியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், சபை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாய பெரியவர்கள் ஆகியோரை சந்தித்து திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு செய்த சாதனைகள் மற்றும் பாதுகாப்பாக செயல்படுவது ஆகியவற்றை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.

என் தப்பு தான்; என்ன மன்னிச்சிருங்க - கரூரில் பெண்கள், சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜோதிமணி

ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, உலமாக்கள் சபை மாநில பொருளாளர் முஜ்ஜிபூர் ரகுமான், அரபிக் கல்லூரி செயலாளர் அபூபக்கர், பொருளாளர் சையது சுலைமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வணிக பிரிவு அமைப்பாளர் அரபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

click me!