சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...! வேதனைப்படும் அமைச்சர் கீதா ஜீவன்

By Ajmal KhanFirst Published Aug 24, 2022, 11:25 AM IST
Highlights

எதுவும் தனக்கு கிடைக்கவில்லை, யாரும் தன்னை கவனிக்கவில்லை என நினைத்தாலே குழந்தைகள் எளிதாக சமூகத்தில் வித்தியாசாமானவராக மாற்றபடுவதாக தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், அப்படிபட்டவர்கள் தான் சமூகவிரோதிகளிடம் சிக்கி குற்றவாளியாக மாறிவிடுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கட்டில் மெத்தை

கோவையில்  நீதித்துறை பயிற்சி மையக்கட்டிடத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,  அரசு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் மற்றும்  வெளிமாநிலங்களில் இருந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், கூர்நோக்க இல்லத்தில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட வசதிகளை செய்து தர தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதோடு ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வராத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டுள்ளதாக தெரிவித்தார். தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, யாரும் தன்னை கவனிக்கவில்லை என குழந்தைகள் நினைப்பதாலையே அவர்கள் எளிதாக சமூகத்தில் வித்தியாசாமானவமாக மாற்றபடுவதாக  கூறினார். இப்படி பட்டவர்கள் சமூகவிரோதிகளிடம் சிக்கி குற்றவாளியாக மாறிவிடுவதாக வேதனை தெரிவித்தார்.

மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.. ஸ்ரீமதியின் தாய் எடுத்த அதிரடி முடிவு..!

சமூக விரோத செயல்களில் குழந்தைகள்

சமீபகாலமாக சட்டத்துக்கு விரோத செயல்களை செய்வதில் குழந்தைகளை அதிகளவு ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தவர், குழந்தைகளின் நலனுக்காக போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஆகியவற்றை காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் சிறுவர்கள் கடையும் வைக்க முடியாது. வேலைக்கும் செல்ல முடியாமல் வேதனைப்படுவதாக தெரிவித்தார்.  ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் செய்த தவறுகளாக அவர்களை எண்ணி குழந்தை நேயத்தோடு அணுகி அவர்களை நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் வெளியே விடலாமல் தங்களது உயர்கல்வியை இல்லத்திலிருந்தே தொடரலாம் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் அதற்கும் அனுமதி வழங்ககபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர்கள்  விருப்பத்தின் பேரில்  வெளியே செல்பவர்களுக்கு தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கபட்டு வருவதாகவும் கூறினார். 

இதையும் படியுங்கள்

பாஜகவில் உழைத்தவர்களுக்கு பதவி இல்லை...! பணம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு...? அண்ணாமலையை அலற விடும் மைதிலி வினோ

click me!