காவலர்கள் தயார் நிலையில் இருங்க.. டிஜிபி சைலேந்திர பாபு திடீர் சுற்றறிக்கையால் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Aug 24, 2022, 9:56 AM IST
Highlights

காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர் வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி சுற்றிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர் வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், சாதி, மதத் தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் வர உள்ளதால்,இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளதால் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க;- அமைச்சர் அன்பில் மகேஷிடம் வசமாய் சிக்கிய பள்ளி மாணவர்கள்.. உடனே ஆசிரியரை கூப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?

எனவே, ஆயுதப்படையில் உள்ள ஆளிநர்களுக்கும், சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று கவாத்து பயிற்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆயுதப் படையில் துணை கண்காணிப்பாளர் முதல் ஆய்வாளர்கள் வரையானவர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழிநடத்துவதற்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருள் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஆயுதப் படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, அவசரகாலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் டிஜிபி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க;-  ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் கழுத்தை அறுத்தது யார்? தொல்.திருமாவளவன் பகீர் தகவல்!!

click me!