மதுரை வீரர் லட்சுமணன் வீர மரணம்.. ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் !

By Raghupati R  |  First Published Aug 13, 2022, 2:56 PM IST

தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்   3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே இந்திய ராணுவ முகாமிற்குள்  2 பயங்கரவாதிகள் புகுந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில்  2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  அதேநேரம் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்   3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.  

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

மதுரை மாவட்டம்‌ திருமங்கலம் புதுபட்டியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியின் மகன் லட்சுமணன். 2019 ஆம் ஆண்டு முதல்  ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல்  மதுரைக்கு கொண்டு வரப்பட்டது .மறைந்த  ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும்  மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர் . இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊரான டி புதுப்பட்டிக்கு  எடுத்துச் செல்லப்பட்டது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

click me!