ரூ. 25க்கு தேசிய கொடியை வாங்கிதான் ஆகணும்.. இல்லனா 1000 ஆபராதம்.. கோவை மாநகராட்சி ஊழியர்கள் அட்ராசிட்டி.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 9:58 AM IST
Highlights

கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள வேண்டுமென கடைகாரர்களை நிர்ப்பந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கடைகாரர்களை மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

நாட்டில் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது, இதற்காக மத்திய மாநில அரசுகள்  சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும், வீடு தோறும் தேசிய கொடியேற்றி கொண்டாட நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: சென்னையில் செருப்பில் கடத்தப்பட்ட ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்..சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

இதேபோல் தமிழக பாஜக மாநிலம் முழுவதும் 1 கோடி, தேசிய கொடிகளை  வழங்க முடிவு செய்து அதற்காக தேசிய கொடிகளை வழங்கிவருகிறது. மேலும் அக்காட்சி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கல்லூரிகளில் சுதந்திர தின பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்தி வருகிறது. 

இதையும் படியுங்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை… ரூ.20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு கண்டுபிடிப்பு!!

இது ஒருபுறம் உள்ள நிலையில்,  தபால் அலுவலகங்கள் மூலமாகவும் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் தபால் அலுவலகங்கள் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கோடி தேசியக்கொடிகள் விற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 கோடி ரூ.25 க்கு விற்கப்படுகிறது, கொடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே அது டெலிவரி செய்யப்படும் என்றும் தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு 75வது சுதந்திர தின விழாவை  பிரமாண்ட முறையில், வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி ஊழியர்கள்  கடை கடையாக சென்று ஒரு தேசியக்கொடியை 25 ரூபாய் கொடுத்து வாங்கியேதீர வேண்டும் என கடைக்காரர்களை நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வாங்க மறுத்தால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், பலரும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர், கோவை மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடி விற்க வேண்டிய அவசியம் என்ன, நிர்பந்தம் என்ன? கடைகடையாக சென்று கொடி விற்பனை செய்ய சொன்னது யார், யார் உத்தரவின் கேரில் கடைகளில் கொடி விற்பனை செய்து வருகிறார்கள்? கோவை மாநகராட்சி கொடியை விற்பனை செய்யச் சொல்லியுள்ளதா, அப்படி இருந்தாலும் கொடி வாக்கிதான் ஆக வேண்டும் என எப்படி கட்டியப்படுத்த முடியும்? 

கொடி வாங்க விட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்  என மிரட்டுவதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கொடி வியாபாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்? கடைக்காரர்களை கொடி வாங்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் குறிப்பிட்ட மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் இந்த தகவல் உறுதிசெய்யப்படவில்லை, இது ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து விளக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

click me!