இதுதான் ஸ்டாலினிசம்... சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!!

By Narendran SFirst Published Apr 1, 2023, 12:12 AM IST
Highlights

அரசின் திட்டத்தை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

அரசின் திட்டத்தை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மற்றும் அதன் மீதான விவாததில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

இதையும் படிங்க: புதுவை சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு பலாப்பழம் வழங்கிய பாஜக உறுப்பினர்

அப்போது, ஆடும் மாட்டை ஆடிக் கறந்து, பாடும் மாட்டை பாடிக் கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம். தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார். ஐநா சபையில் கல்வி மாற்றம் என்ற மாநாட்டில் இல்லம் தேடிக்கல்வி தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதுதான் ஸ்டாலினிசம். பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்து நாள் இழப்பு.

இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா... சிறுமிகள் முதல் வயதானோர் வரை ஆடி அசத்தல்!!

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடாது. 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 68.47 கோடி பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள்ளார். 

click me!