AAVIN MILK : அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக் தகவல் கொடுத்த ஆவின்.! என்ன தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Mar 27, 2024, 7:58 AM IST
Highlights

தனியாரை விட குறைந்த விலையில் பால் விநியோகம் செய்து வரும் ஆவின், சென்னையில் இன்று காலை பால் விநியோகம் தடைபடும் என்ற தகவலை வெளியிட்டு பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

ஆவின் பால் விநியோகம்

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் முக்கியமானது மட்டுமின்று இன்றியமையாதது பால், அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் பாலானது தரத்துடன் சிறந்து முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தனியாரை விட குறைந்த விலையில் பால் கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது.

பிற 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொழுப்பு சஅளவை பொறுத்து ஆவின் பாலை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அதிகாலையிலேயே ஷாக் கொடுத்து ஆவின் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

அதில், சென்னை முழுவதும் பொதுமக்கள் விரும்பி பருகும் ஆவின் பால் விநியோகம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெரம்பூர்,அண்ணா நகர்,அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இருப்பினும் காலதாமதத்திற்கு ஆவின் நிர்வாகம் வருந்துகிறது. இத்தகைய மேலும் இந்த சூழ்நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

வெப்ப அலை எச்சரிக்கை: வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

click me!