மிரட்டும் மிக்ஜாம் புயல்.. வெள்ளக்காடாக மாறும் சென்னை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

By Ansgar RFirst Published Dec 4, 2023, 10:48 AM IST
Highlights

Chennai Flood Emergency Numbers Announced : சென்னையில் உள்ள மின்வாரிய கட்டுப்பாட்டு அறையில் மின்சாரம், நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை டிசம்பர் 5ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நகர்புற பேருந்துகள் இயக்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தாம்பரம், கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், எக்மோர் ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெளியூரிலிருந்து வந்திறங்கிய பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, இறுதியாக நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு இடையே நாளை டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது சுமார் 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

கனமழையால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; தத்தளிக்கும் நோயாளிகள்!!

ஆகவே மக்கள் புயல் அபாய எச்சரிக்கையை முன்னிட்டு வெளியில் தேவை இன்றி பயணம் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும், வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளவர்கள் ஒருநாள் கழித்து தங்களுடைய திட்டங்களை வகுக்குமாறும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பு குறித்து 1077 என்ற எண் மூலம் அவசர செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை.. MTC பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்? கோயம்பேட்டில் சிக்கி தவிக்கும் பயணிகள் - எகிறும் ஆட்டோ மீட்டர்!

மேலும் 9445869848 என்ற what'sapp எண் மூலமாகவும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை 1070என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே தேவைப்படுபவர்கள் இந்த எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!