மேட்டூர் அணையின் நீர்வரத்து மளமளவென குறைவு.. இன்றைய நிலவரம்..

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 11:10 AM IST
Highlights

அணையின் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.47 டிஎம்சி . அணையின் நீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், நீர் வெளியேற்றம் 65,000 கன அடியாக உள்ளது. நேற்று 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றபட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு வெகுவாக குறைந்தது. அதன்படி தற்போது அணையில் நீர்வரத்து நேற்று 1.75 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 65000 கன அடியாக மளமளவென குறைந்தது. 

மேலும் படிக்க:காவிரியில் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைவு.. 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்..

இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.47 டிஎம்சி . அணையின் நீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், நீர் வெளியேற்றம் 65,000 கன அடியாக உள்ளது. நேற்று 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றபட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும் 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 43,500 கன அடி நீரும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி விதம் வெளியேற்றப்படுகிறது. முன்னதாக அணையின் நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது ..

click me!