நிரம்பிய மேட்டூர் அணை..16 கண்மதகு வழியாக உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 11:12 AM IST
Highlights

42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை எட்டியுள்ளது. 120 அடியை எட்டியதால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை எட்டியுள்ளது. 120 அடியை எட்டியதால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” மேட்டூர்‌ அணையின்‌ நீர்மட்டம்‌ இன்று காலை 8 மணி நிலவரப்படி 119 அடியை எட்டியுள்ளது. அணையின்‌ நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால்‌ அணையின்‌ நீர்மட்டம்‌ விரைவில்‌ அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.

மேலும் படிக்க:ஓபிஎஸ் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதியா? வெளியானது டெஸ்ட் ரிப்போர்ட்..!

அணையில்‌ இருந்து உபரி நீர்‌ கால்வாயில்‌ ஐம்பதாயிரம்‌ கன அடி முதல்‌ ஒரு லட்சம்‌ கன அடி வரை எந்த நேரத்திலும்‌ திறந்து விடப்படலாம்‌ என்றும்‌, திறந்து விடப்படும்‌ தண்ணீரின்‌ அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்‌ என்றும்‌ தெரிவித்துக்‌
கொள்ளப்படுகிறது.எனவே, காவிரி கரையோரம்‌ மற்றும்‌ தாழ்வான பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்‌ அவர்களின்‌ உயிர்‌ மற்றும்‌ உடமைகளின்‌ பாதுகாப்பு மற்றும்‌ பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பைக் மீது லாரி பயங்கர மோதல்.. மருமகன், மாமியார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.!

கர்நாடகாவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடிக்கொண்ட மொத்த கொள்ளளவில் நீர்மட்டம் 119.29 அடியாக இருந்தது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,18,671 கன அடியாக இருந்தது.

மேலும் படிக்க:அண்ணாமலையுடன் செல்பியா.?? வேறு வேலைய பாருங்க.. பாஜகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

இந்நிலையில் அணையின் நீர்மட்டம் காலை 10.30 மணியளவில் 120 அடியை எட்டியதால், 16 கண்மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 8 மாதங்களில் 2 வது முறையாக16 கண்மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 50,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 42 வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!