கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராய மரணங்கள்! தமிழகத்தில் தொடரும் அவலம்!

By SG Balan  |  First Published May 16, 2023, 5:47 PM IST

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020ஆம் ஆண்டு முதல் 26 பேர் தமிழகத்தில் கள்ளச்சாராயத்துக்கு பலியாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது.


தமிழக அரசு கடந்த 2022-23ஆம் நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டு கிடைத்த ரூ.36,000 கோடி டாஸ்மாக் வருவாயைவிட 22.3 சதவீதம் அதிகம். தமிழக அரசு மதுபானங்களின் விலையை 3 மடங்கு உயர்த்தியதுதான் இந்த வருவாய் உயர்வுக்குக் காரணம்.

விலை உயர்வால் குடிகாரர்கள் மலிவாகக் கிடைக்கும் கள்ளச்சாராயத்தைத் தேடிச் செல்கின்றனர். இதனால் அண்மையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சுமார் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விசாரணையில் அவர்கள் அருந்தியது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் என்று தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் - அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணம் ஏதும் நிகழவில்லை என தமிழக அரசு கூறுகிறது. ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2016 முதல் 2019 வரை கள்ளச்சாராய மரணங்கள் இல்லாதபோதும், 2020ஆம் ஆண்டில் 20 பேரும், 2021ஆம் ஆண்டில் 6 பேரும் தமிழகத்தில் கள்ளச்சாராயத்துக்கு பலியாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. அது மட்டுமின்றி 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அனைத்தும் மெத்தனால் காரணமாகவே ஏற்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது.

1937ஆம் ஆண்டு முதல் மெத்தனால் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை அமல்படுத்த மறுக்கும் அரசு, அதனால் கள்ளச்சாராய விற்பனை பெருகி மரணங்கள் அதிகரிக்கும் என்று சொல்லிவருகிறது. டாஸ்மாக் விற்பனையை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டு செயல்படும் அரசு, கள்ளச்சாராய தடுப்புக்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருந்துள்ளது. அரசுகளின் வருமானம் காரணமாக இதை கண்டுகொள்ளவில்லை.

மதுவிலக்கு விவகாரம்; அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் - திருமாவளவன் அறிவிப்பு

சில தினங்களுக்கு முன் சுப்பராயன் என்ற 70 வயது நபர் ஒருவர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தார். அப்போதே விசாரணை நடத்தி இருந்தால் இப்போது விழுப்புரம் எக்கியார்குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு பெருக்கரணை கிராமத்திலும் நிகழ்ந்துள்ள மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். எனவே அரசு முன்னெச்சரிக்கையுடன் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மெத்தனால் கலந்த கள்ளச்சாராய விற்பனையை ஒடுக்கி இருக்கலாம். இனியாவது அரசு துரித நடவடிக்கை எடுத்து இறப்புகளைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

click me!