Crime News: பள்ளிப்பருவ காதலால் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் தலை துண்டித்து கொடூர கொலை

By Velmurugan s  |  First Published May 16, 2023, 5:44 PM IST

தேனி மாவட்டத்தில் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட காதலால் 12ம் வகுப்பு முடித்த மாணவன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வீருசின்னம்மாள் புறத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் கமலேஸ்வரன் (வயது 18). இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் போடேந்திரபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் அந்தப் மாணவியின் பெற்றோர் தன்னாட்சி மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மகளின் மரணத்தால் துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் உறவினர்கள்

இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் பூதிபுரம் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பழனிசெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பூதிபுரம் கல்லூரணி பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்து கிடப்பது கமலேஸ்வரன் என்பதை உறுதிபடுத்திக் கொண்டனர்.

இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவரை கொல்ல சதி? காவலாளியை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

இதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபர்களான தன்னாட்சி மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி பருவ காதலால் இளைஞர் தலை வெட்டப்பட்டு துண்டாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!