மெரினா போறீங்களா..? போலீஸ் சொன்ன இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க….!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 8:55 PM IST
Highlights

மெரினா கடற்கரையில் நிகழும் உயிரிழப்புகளை தடுக்க சென்னை மாநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

சென்னை: மெரினா கடற்கரையில் நிகழும் உயிரிழப்புகளை தடுக்க சென்னை மாநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

உலகின் மிக நீளமான 2வது கடற்கரை என்ற பெருமையை பெற்றது சென்னை மெரினா. சென்னையில் முக்கிய சுற்றுலா தளமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது.

இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது உண்டு. அவர்களில் பலர் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதும் வழக்கம். அப்படிப்பட்ட தருணங்களில் ராட்சத அலை வந்து அவர்களை இழுத்து செல்லும் சம்பவங்களும் நடப்பது உண்டு.

இது போன்ற உயிரிழப்பு சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சென்னை மாநகர காவல்துறை முக்கியமான கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர உதவி காவல் ஆணையர் பேசிய ஆடியோவும் வெளியாகி இருக்கிறது.

அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. கடல் அலை சீற்றமாக இருப்பதால் பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். அன்பு செல்வங்களை இழக்காதீர்கள்.

அவசர உதவிக்கு 94981 00024 என்ற செல்பேசிக்கு அழையுங்கள். காவல்துறையின் எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!