தமிழகத்தை பாதிக்கும் மேகதாது அணை - ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்தது கர்நாடக அரசு

 
Published : Feb 16, 2017, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தமிழகத்தை பாதிக்கும் மேகதாது அணை - ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்தது கர்நாடக அரசு

சுருக்கம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே நெடுங்காலமாக விரச்சனை இருந்து வருகிறது. காவிரி விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாகட்டும், பாஜக அரசாகட்டும் கர்நாடக மாநிலத்திற்கே இதுவரை சாதகமாக இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி திறந்து விடாததால் தமிழக டெல்டா மாவட்டங்களில்  விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியதால் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாமான  தண்ணீர் கிடைக்காத நிலையில்  காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத் தில் புதிதாக அணை ஒன்றை கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது.

அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீர் வெகுவாக குறைந்து விடும் என்பதால், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில்,புதிய அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.

மழை காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கர்நாடக அரசு சொல்லி வருகிறது,

ஆனால் இந்த அணை கட்டப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு முற்றிலுமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஏற்கனவே மறைந்த ஜெயலலிதா உள்ளிட்டோர் கடும் எதிப்புத் தெரிவித்திருந்த நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு 5000 கோடிரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்