
நாமக்கல்,
நாமக்கல்லில் மருத்துவப்படியை உயர்த்தி வழங்க கோரி அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் - ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சின்னண்ணன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பபட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
7–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதியர்களுக்கு பென்சன் நிர்ணயம் செய்ய வேண்டும்.
மருத்துவபடியை உயர்த்தி வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் ஓய்வூபெற்ற தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.