சேலத்தில் 2 கிலோ ஆட்டிறைச்சி ஓசியாக வழங்கக் கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் 2 கிலோ ஆட்டிறைச்சி ஓசியாக வழங்கக் கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி பேருந்து நிலையம் அருகே மூக்குத்தி கவுண்டர் என்ற முதியவர் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அங்கு வந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய உதவியாளர்கள் பாலசுப்பிமணியம், சிவபெருமான் ஆகியோர் மூக்குத்தி கவுண்டரிடம் 2 கிலோ இறைச்சி ஓசியாக கேட்டதாக கூறப்படுகிறது.
இறைச்சியை ஓசியாக தர அவர் மறுத்துவிட்டார். ஆகையால் கோபமடைந்த காவல் துறை அதிகாரிகள் அவரை தகாத வார்த்தையால் வசைப்பாடியுள்ளனர். மூக்குத்தி கவுண்டர் மற்றும் அவரது மனைவி, மகன் விஜயகுமாரை ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் விஜயகுமாரின் காதில் பலமாக போலீசார் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையாளர் சங்கர், காவல் ஆய்வாளர்கள் இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து தான் செய்த செயலுக்கு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கைக்கூப்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.