
MDMK Principal Secretary Durai Vaiko : திமுகவில் தலைவராக இருந்த கருணாநிதி, தனக்கு பிறகு அரசியல் வாரிசாக தனது மகன் மு.க.ஸ்டாலினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து விலகிய வைகோ, மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து இணைந்தனர். திமுகவை வைகோ கைப்பற்றக்கூடும் என்ற தகவலும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பல ஆண்களில் மதிமுக பல தேர்தல் களத்தை சந்தித்தாலும், வைகோவின் முடிவின் காரணமாக பல தேர்தல்களில் வெற்றியானது கைவசம் கிடைக்காமல் சென்றது.
மதிமுகவில் துரை வைகோ
குறைவான தொகுதி ஒதுக்கியதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது. இந்த நிலையில் வைகோவின் வயது மூப்ப காரணமாக மதிமுகவை அடுத்து தலைமை தாங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் மதிமுக முதன்மை செயலளாராக தனது மகன் துரை வைகோவை முன்னிலைப்படுத்தினார். வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்கியவர் தனது கட்சிக்கும் தனது மகனை முன்னிலைப்படுத்துவரை மதிமுக நிர்வாகிகள் விரும்பவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருந்த போதும் மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றார். திருச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகவும் தேர்வானார். இந்த நிலையில் திடீரென துரை வைகோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக இப்படி கட்சிக்கும்
துரை வைகோ ராஜினாமா
தலைமைக்கும் நீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் 'என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால் துரை வைகோவின் ராஜினாமா முடிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பெயர் இடம்பெற்றிருந்தது.
நிராகரித்த வைகோ
எனவே மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ தொடருவார் என வைகோ முறைமுகமாக தெரிவித்துள்ளார்.இந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ,மத்திய அரசுக்கு கண்டனம், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு,வக்பு சட்ட மசோதா, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், தமிழ் ஆட்சி மொழி, ஜாட் திரைப்படத்திற்கு எதிர்ப்பு,ஆளுநரை நீக்க வேண்டும் என்பட உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.