கைவிரித்த தேர்தல் ஆணையம்! மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது? வேற எந்த சின்னத்தில் நீக்க போறாங்க தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 27, 2024, 10:27 AM IST

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ததங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. 

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ததங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க: இரட்டை இலை முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையம் கதவை மீண்டும் தட்டும் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு?

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவின் கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். 

இதையடுத்து, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இவ்வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை. எனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரே முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  aiadmk: நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் திடீரென ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..!

இதை கேட்ட நீதிபதிகள் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், மதிமுக ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!