
தருமபுரி
தருமபுரியில் தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்ட மே தின விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று சங்கக் கொடியை ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரியில், மே தின விழா தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சங்க மண்டலச் செயலாளர் பரமசிவம், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, சலவை தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி சிங்கராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர் சங்கச் செயலாளர் ரவி வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று சங்கக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் முன்னாள் நகராட்சித் தலைவர் வெற்றிவேல், கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத்தலைவர் ரங்கநாதன், வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி சிவக்குமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரவி, நகர துணை செயலாளர் அறிவாளி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.