
தருமபுரி
தருமபுரியில் இடியுடன் கூடிய பரவலாக மழை பெய்ததால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பொதுவாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், பகலில் அனல் காற்று வீசியும் வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், தருமபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், தரைப்பகுதி குளிர்ச்சி அடைந்தது.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே மழையால் நகரில் ஆங்காங்கே சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுப்புற கிராமங்களில் பெய்த மழையால் அணைகளுக்கும், கிணறுகளுக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது.