
சேலம் அருகே பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து 720 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர்.
சேலத்தை அடுத்த கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அத்தியப்பன். இரும்பு வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றார்.
திருப்பதியில் தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொண்ட அத்தியப்பன், இன்று அதிகாலை திருப்பதியில் இருந்து வீடு திரும்பினார்.
அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 720 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அத்தியப்பன் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதிக்கு மொட்டை அடிக்க சென்றிருந்த நேரத்தில் அத்தியப்பனின் வீட்டை மர்ம நபர்கள் மொட்டையடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.