மே 4 "கத்திரி வெயில்'' தொடக்கம்..! வெயில் "இப்படி" இருக்குமாம்...!

First Published Apr 30, 2018, 4:20 PM IST
Highlights
may 4 onwards kathiri veyil will start


மே 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களில் கத்திரி வெயில் தொடங்க இருப்பதால் இப்போதே மக்கள் பெரும் அவதிப்பட தொடங்கி உள்ளனர்

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் வெயிலின் தாக்கம் தாங்க  முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

வேலூர், திருச்சி, சேலம் என பல இடங்களில் இப்போதே வெயில் சதமடித்து வருகிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழையும் பெய்து வருகிறது.

மே 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால், அதிக வெப்ப நிலையும் வெப்பக்காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

வேலூர், சேலம், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட பல 8 மாவட்டங்களில்  அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும் என்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

அதே வேளையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது  

மேலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!