"ஜெ" டிஎன்ஏ..! அப்போலோவின் கதையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!

Asianet News Tamil  
Published : Apr 30, 2018, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
"ஜெ" டிஎன்ஏ..!  அப்போலோவின் கதையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!

சுருக்கம்

jayalalitha DNA issue what doctor says?

ஜெ டிஎன்ஏ..! அப்போலோவின் கதையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!

நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருக்கிறேன் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா என அறிக்கை தாக்கல்  செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதற்கு பதில் அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்,   ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்போலோ மருத்துவ மனையில் இல்லை  என பதில் அளித்து விட்டது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவிசங்கர், பிரபல தனியார் இதழுக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.அதில், "medico legal case (mlc) } ஆக இருந்தால், ரத்த மாதிரிகள் கண்டிப்பாக வைத்திருக்க  வேண்டும்.ஆனால் பொதுவாக, இறந்து போன ஒருவரின் ரத்த மாதிரிகள்  வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் அப்படி சொல்லி  இருக்கிறது அப்போலோ என தெரிவித்து உள்ளார்

ஆனால் மிகப்பெரிய ஆளுமையின் சர்ச்சைக்குரிய மரணம் அது. எனவே   ஜெ வின் ரத்த மாதிரிகள் இல்லை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தால், சமர்ப்பித்து இருப்பார்கள..அதற்கு பதிலாக, ரத்த மாதிரிகள் இருக்கிறதா என எழுப்பியதால், இல்லை என சுமூகமாக  பதில் அளித்து விட்டது அப்போலோ என தெரிவித்து உள்ளார்

பெதாலாஜி டாக்டர் ராதிகா தெரிவிக்கும் போது..!

பொதுவாகவே ஒரு நோயாளின் ரத்த மாதிரிகளை 48  மணி  நேரத்திற்கு  பாதுகாப்பார்கள். ஆனால் தேவைப்பட்டால் பல ஆண்டு காலம்  பாதுகாக்க அதற்காக முறைகள் உள்ளது என தெரிவித்து உள்ளார்

இதே போன்று டிஎன்ஏ சோதனைக்கு வேறு என்ன மாற்று வழிகள் உள்ளது என கேட்ட கேள்விக்கு, சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தடவியல் துறை தலைவர் சம்பத் குமார் பிரபல இதழுக்கு அளித்த பேட்டியில்,

"இவ்வளவு பெரிய விஐபி பேஷன்ட் என்பதால், நிச்சயம் அவரது ரத்த மாதிரிகள் இருக்கும். அதனை அப்போலோ நிர்வாகம் தர மறுப்பதால், ஜெயலலிதா பயன்படுத்திய வாட்ச், கண்ணாடி, முடி கிடைத்தால் கூட  அதன் மூலம்  டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியும் என என கூறுகிறார்.

ஆனால் அதெல்லாம் அவருடையது தானா என்ற கேள்வி எழுப்பி அது வேறு பக்கம் திரும்பி விடும்.

மேலும், இதையும் தாண்டி கடைசியாக ஜெயலலிதாவின் உடலை  தோண்டி எடுக்க வேண்டும் என ஆப்ஷன் தேர்வு செய்தால் கூட, அப்படி எல்லாம் செய்யாமலே, ஒரு சிறு துளையிட்டு அவரது  உடலிலிருந்து  சிறு துணுக்கு கிடைத்தாலும் டிஎன்ஏ சோதனை செய்து விட முடியும்  என்றுள்ளார்

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை  காப்பாற்ற விட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அப்போலோவிற்கு தெளிவாக தெரிந்துள்ளது என கூறுகிறார்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!