8 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. இன்னும் 2 நாள் கவனம்! தமிழக மக்களை எச்சரித்த வானிலை மையம்

By Raghupati R  |  First Published May 17, 2023, 9:11 AM IST

தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இன்னும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருப்பதால் சென்னையை பொறுத்த வரையில் மாநகரில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி 110 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நுங்கம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் வாட்டி வதைத்தது.  அதேபோல சென்னை எண்ணூரில் 103 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது என்றும், 2014-ல் 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என்றும், சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

8 வருடத்துக்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக கூறப்படுகிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 110.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், திருத்தணி மற்றும் கரூர் - பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

மதுரை, திருச்சி, அருப்புக்கோட்டை, ஈரோடு மற்றும் கடலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை, நாகை, ராமநாதபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் 10 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

இதையும் படிங்க..டெல்லி விரையும் டி.கே.சிவக்குமார்.. தலைமைக்கு தூதுவிட்ட சித்தராமையா - அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

click me!